என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செயின் திருட்டு"
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர்மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக தாடிக்கொம்பு பகுதியில் காலை நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கும்பல் கொள்ளையடித்து சென்றது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த குற்ற செயல்களுக்கு கொள்ளையர்கள் பெரும் பாலும் திருட்டு மோட்டார் சைக்கிளையே பயன்படுத்தி வந்தனர்.
எஸ்.பி. சக்திவேல் உத்தரவுபடி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியதால் செயின் கொள்ளையர்கள் பிடிபட்டனர். மேலும் குற்றச் செயல்களும் குறைந்தன.
திண்டுக்கல்- தாடிக் கொம்பு சாலையில் நகர் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்துள்ள போலீஸ்காரர் பரமேஸ்வரன் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது18) என்பதும் பைக்கை திருடியதும் தெரியவந்தது.
மேலும் சிவக்குமார் மீது நகர் வடக்கு, மேற்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேறு ஏதும் கொள்ளை கும்பலுக்கு இவருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(70). இவர் நேற்று வேப்பனப்பள்ளிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ராமன் என்பவரது மளிகை கடை முன்பு அமர்ந்திருந்த அவரிடம் இரண்டு பெண்கள் வந்து பேச்சு கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த தின்பண்டங்களையும் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். அப்போது மூதாட்டி கோவிந்தம்மாள் அணிந்திருந்த ரூ. 64 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் கையும், களவுமாக பிடித்து வேப்பனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குபதிவு செய்து, அந்த பெண்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்ததுடன்,. விசாரணையில் வேப்பனஹள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சாந்தம்மாள்(35), நாச்சிக்குப்பம் வெங்கடேஷ் மனைவி நாகரத்தினம்மா(36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தம்பாடியை அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராணி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். ராணி கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழட்டி மேசை மீது வைத்து விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மேசையின் மீது வைத்திருந்த 2பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் புகுந்து மேசையின் மீதுவைத்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்